- அருப்புக்கோட்டை காந்திநகர்
- அருப்புக்கோட்டை
- காந்திநகர்
- அருப்புக்கோட்டை திருச்சுழி சாலை
- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- மதுரை
- தின மலர்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்திநகர் புறநகர் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு செல்லும் வழியில் உள்ளது காந்திநகர். இந்த சந்திப்பில் இருந்து தான் மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லவும் அங்கிருந்து மதுரைக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் ஏறிஇறங்கி செல்கின்றனர். தினமும் இந்த பகுதியில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்த பகுதியில் நகராட்சி மூலம் 90 லட்சம் ரூபாய் நிதியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனியான கழிப்பறைகள், போலீஸ் அவுட் போஸ்ட், பயணிகளுக்கான இருக்கை வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கழிப்பறை சில நாள் திறந்திருக்கும் சில நாள் மூடி இருக்கும் போலீஸ் அவுட்போஸ்ட் செயல்படவில்லை. குடிநீர் வசதி இல்லை. தூத்துக்குடி, திருச்செந்தூர் பஸ்கள் புறநகர் பேருந்து நிலையத்திற்குள் வராமல் பஸ் ஸ்டாண்ட் வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் காலையில் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் நின்று ஏறிச் செல்கின்றனர். மேலும் புறநகர் பஸ் ஸ்டாண்டிற்குள் பேருந்து செல்லும் நுழைவு இடத்தில் ரோடு குண்டும் குழியுமாகவும் கிடங்காகவும் கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டும் உள்ளன. இதனால் பேருந்துகளின் டயர்கள் பதம் பார்க்கப்பட்டு பஞ்சர் ஆகி விடுகிறது.
இது நாளடைவில் வாகனங்கள் அதிகம் சென்று பெரும் பள்ளமாக மாறிவிடும். மேலும் வயதானவர்கள் ரோட்டை கடக்கும் போது தடுக்கி விழுந்து விடுகின்றனர். போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படாததால் இரவு நேரங்களில் திருட்டுப் பயம் உள்ளது. எனவே காந்திநகர் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தவும், முறையாக ரோடு அமைத்து தரவும் வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.