×

‘டாட்டூ’ வரைய ஒரே ஊசியை பயன்படுத்த கூடாது: பக்தர்கள் கோரிக்கை

பழநி: பழநியில் ‘டாட்டூ’ தொழிலாளர்களிடம் ஒரே ஊசியை பயன்படுத்தக் கூடாதென சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவர்களும் அதிகமாக குவிந்துள்ளனர். மத்தளம், மூங்கில் பொருட்கள், பிளாஸ் ஆப் பாரீஸ் வகை மாவினால் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவைற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக சிவகிரிப்பட்டி பைபாஸ் ரோட்டில் டென்ட் அமைத்து 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். இவர்களில் சிலர் தற்போது பழநி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு இயந்திரங்களின் மூலம் டாட்டூ எனும் நவநாகரீக பச்சை குத்தும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேவர்சிலை, கிரிவீதிகளில் ஏராளமானோர் சாலையோரங்களில் டென்ட் அமைத்து டாட்டூ வரைந்து வருகின்றனர். ஒரு எழுத்திற்கு ரூபாய் 50 வசூலிக்கின்றனர். உருவங்கள் மற்றும் சின்னங்கள் வரைவதற்கு அவற்றின் தன்மைகேற்ப ரூபாய் 300 வரை வசூலிக்கின்றனர். விலை மலிவு என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் ஆவலுடன் டாட்டூ வரைந்து செல்கின்றனர். டாட்டூ வரைய பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஊசிகள் மாற்றப்படுகிறதா என்ற ஐயம் பக்தர்கள் மத்தியில் எழுந்தள்ளது. இதனால் ரத்த பரிமாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் பக்தர்களுக்கு பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் டாட்டூ வரையும் தொழிலாளர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில், ‘டாட்டூ வரையும் தொழிலாளர்களிடம் ரத்த பரிமாற்ற தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் டாட்டூ வரைந்து கொள்ளும் பக்தர்களிடமே அந்த ஊசியை வழங்கிட வேண்டுமென அறிவுறுத்த வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துபவர்கள் மீது கைது மற்றும் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்றார். …

The post ‘டாட்டூ’ வரைய ஒரே ஊசியை பயன்படுத்த கூடாது: பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை