×

பெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: காஞ்சி கலெக்டர் அனுப்பி வைத்தார்

காஞ்சிபுரம், ஏப்.2: காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குடோனில் இருந்து பெரும்புதூர், ஆலந்தூர் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் அனுப்பி வைத்தார். காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குடோனில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு அலகு இயந்திரங்கள் தேர்வு செய்யும், முதலாவது சீரற்றமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஇ), வாக்காளர்கள் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் (விவிபிஏடிஎஸ்) ஆகியவையின் முதலாவது சீரற்றமயமாக்கல் பணி முடிந்து, அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் தொகுதிகளில் கூடுதல் சப்ளிமெண்ட் பேலட் யூனிட் தேவைப்படுவதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குடோனில் இருந்து பெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு அலகு இயந்திரங்களை, தேர்வு செய்யும் முதலாவது சீரற்றமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் அனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: காஞ்சி கலெக்டர் அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Alandur ,Kanchi Collector ,Kanchipuram ,District Electoral Officer ,Collector ,Kalachelvi Mohan ,Perumbudur ,Kanchipuram… ,Dinakaran ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...