பெங்களூர்: ஐபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டி ஒவ்வொரு முறை தொடங்கும்போதும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக ஆர்சிபி பார்க்கப்படும். ஆனால், இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளின் பட்டியலில்தான் பெங்களூரு நீடிக்கிறது. நடப்பு தொடரிலும் டு பிளெஸ்ஸி தலைமையிலான ஆர்சிபி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னையிடம் தோற்ற அந்த அணி, 2வது ஆட்டத்தில் பஞ்சாப்பை பந்தாடியது.
சொந்த மண்ணில் நடந்த 3வது ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 7 விக்கெட் வித்தியாத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடக்க வீரர் கோஹ்லி மட்டுமே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மற்ற வீரர்கள் ரன் குவிக்க திணறுவதால் ஆர்சிபி தடுமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் லக்னோவை எதிர்காள்கிறது. எல்எஸ்ஜி நடப்புத் தொடரில் தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் ஆர்சிபி அணியை சற்றே முந்தியுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 20 ரன்னில் தோற்றலும், 2வது ஆட்த்ததில் பஞ்சாப் அணியை 21 ரன் வித்தியாசத்தில் வென்றது லக்னோவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
நேருக்கு நேர்…
* பெங்களூரு – லக்னோ அணிகள் இதுவரை மோதிய 4 ஆட்டங்களில் ஆர்சிபி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
* அதிகபட்சமாக லக்னோ 213 ரன், பெங்களூரு 212 ரன் குவித்துள்ளன.
* பெங்களூருவில் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளதில், ஆர்சிபி 20 ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவிக்க, அடுத்து விளையாடிய லக்னோ 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
The post ஆர்சிபி – எல்எஸ்ஜி இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.