×
Saravana Stores

178 ரன்னில் சுருண்டது வங்கதேசம் இலங்கை வலுவான முன்னிலை

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 531 ரன் குவித்து ஆல் அவுட்டானது (159 ஓவர்). அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்திருந்தது. ஜாகிர் ஹசன் 28, தைஜுல் (0) இருவரும் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜாகிர் 54 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் நஜ்முல் ஷான்டோ 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். தைஜுல் 22, மோமினுல் ஹக் 33, ஷாகிப் அல் ஹசன் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். வங்கதேச அணி 68.4 ஓவரில் 178 ரன் மட்டுமே சேர்த்து முதல் இன்னிங்சை இழந்தது.

இலங்கை பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ 4, விஸ்வா, லாகிரு, பிரபாத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 353 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்துள்ளது. நிஷான் மதுஷ்கா 34 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன், பிரபாத் ஜெயசூரியா 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இலங்கை 455 ரன் முன்னிலை பெற்றுள்ளதால், வங்கதேசம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post 178 ரன்னில் சுருண்டது வங்கதேசம் இலங்கை வலுவான முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Bangladesh ,Ahmed Chowdhury Stadium ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை