×

பறிமுதல் செய்த ₹96 ஆயிரம் திரும்ப ஒப்படைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.2: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மஞ்சவாடிகணவாய் வெள்ளையப்பன் கோயில் சோதனை சாவடியில், கடந்த 21ம் தேதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம் தலைமையிலான குழுவினர், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது பறையப்பட்டி புதூரை சேர்ந்த மோகன்(42) என்பவர் வந்த காரில், ₹96,500 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிபட்டி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். பின்னர், மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல்முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார். அதனை உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலாவிடம் அதற்கான ஆணையை கொடுத்தார். இதையடுத்து தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகனிடம் ₹96,500 ஒப்படைத்தனர்.

The post பறிமுதல் செய்த ₹96 ஆயிரம் திரும்ப ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Stationary Vigilance Team Officer ,Pakhyam ,Salem ,Arur ,Manjavadiganai Valliyappan ,Parayapatti ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு