×

தோஷகானா வழக்கில் இம்ரானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

இஸ்லாமாபாத்: தோஷகானா ஊழல் வழக்கில் மாஜி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தோஷகானா பரிசு பொருள்கள் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரின் மனைவி புஷ்ரா ஆகியோருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடமை நீதிமன்றம் கடந்த ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் மேல்முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பருக்,14 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டார். எனினும் இதர வழக்குகளில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை காரணமாக அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தோஷகானா வழக்கில் இம்ரானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Imran ,Toshakana ,ISLAMABAD ,Imran Khan ,Bushra Bivi ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு