×

சேரம்பாடி பகுதியில் கூலித்தொழிலாளியை கடித்த மலைப்பாம்பு பிடிபட்டது

பந்தலூர், ஏப்.2: பந்தலூர் அருகே சேரம்பாடி சோலாடி பகுதியில் கூலித்தொழிலாளியை கடித்த மலைப்பாம்பு பிடிபட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட சேரம்பாடி சோலாடி தனியார் தேயிலைத்தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் என்பவரை நேற்று முன்தினம் மலைப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.

பணியில் இருந்த சக தொழிலாளர்கள் கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post சேரம்பாடி பகுதியில் கூலித்தொழிலாளியை கடித்த மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Cherambadi ,Bandalur ,Serambadi Choladi ,Krishnan ,Serambadi Forest ,Pandalur, Nilgiris district ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்