×

தேசத்தின் முதல் குடிமகவான குடியரசு தலைவரை எப்படி மதிக்க வேண்டும் என தெரியாதா? பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

சென்னை: பிரதமருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி வழங்கினார். விருது வழங்கும் போது பிரதமர் அமர்ந்து இருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.  இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பிரதமர், மேனாள் துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?.

தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

The post தேசத்தின் முதல் குடிமகவான குடியரசு தலைவரை எப்படி மதிக்க வேண்டும் என தெரியாதா? பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Modi ,CHENNAI ,President ,Drabupati ,BJP ,Advani ,
× RELATED வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும்...