×

பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு விஷமிகள் தீவைப்பு; நீண்ட நேரம் போராடி அணைப்பு

பாணாவரம்: பாணாவரம் அருகே மலையில் விஷமிகள் வைத்த தீயால் மலை முழுவதும் எரிந்தது. இதனை தீயணைப்பு படையினர், பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி ரயில் நிலையம் அருகே பெரிய மலை உள்ளது. இதை சுற்றி எம்ஜிஆர் நகர், கன்னிகாபுரம், காட்டுப்பாக்கம், வெளிதாங்கிபுரம், குப்புக்கல்மேடு, கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, வடலவாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இந்த மலை திடீரென தீப்பற்றி எரிந்தது. வேகமாக பரவிய தீயில் மரங்கள், செடிகொடிகள் என அனைத்தும் கருகி சேதமானது.

இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை, அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மலையடிவாரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மேலும் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து தீ மேலும் பரவாமல் இருக்க அங்குள்ள புதர்களை அகற்றினர்.

கோடை காலங்களில் இதுபோன்று தீவைப்பு சம்பவங்களில் விஷமிகள் ஈடுபடுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காப்புக்காடுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீ வைப்பு செயல்களில் ஈடுபடும் விஷமிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

The post பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு விஷமிகள் தீவைப்பு; நீண்ட நேரம் போராடி அணைப்பு appeared first on Dinakaran.

Tags : Mahendrawadi hill ,Panavaram ,Mahendrawadi railway ,Ranipet district ,MGR ,
× RELATED பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல்,...