×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்; திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21ல் நள்ளிரவில் அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மார்ச் 21 முதல் இன்று வரை கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். 7 நாள் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பதேஜா முன்பு கெஜ்ரிவால் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பி. ராஜ் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு டெல்லி முதல்வர் ஒத்துழைக்க மறுக்கிறார். மழுப்பும் பதில்களையே தெரிவித்து வருகிறார். கடவுச்சொல்லை தர மறுக்கிறார். எனவே, கெஜ்ரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஏப்ரல் 15 வரை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் வைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே அமலாக்கத்துறை காவலில் இருந்த நிலையில் தற்போது நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலை தொடர்ந்து திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்படுகிறார். அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

* டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

* சிறையில் இருந்தபடியே முதலமைச்சர் பணியை தொடருவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

* அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை துறந்தால் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கப் போவது யார்?

* சிறையில் இருந்தபடியே முதலமைச்சர் பணிகளை தொடர சட்டத்தில் இடம் உள்ளதா? என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்; திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!! appeared first on Dinakaran.

Tags : Tigar ,Delhi ,Chief Minister Kejriwal ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம்...