×

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து திசை திருப்புவதா?- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை பிரதமர் அரங்கேற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் மூலம் தமிழ்நாட்டு மக்களை திசைத்திருப்ப வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

 

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என்று கூறினார்.

The post கச்சத்தீவு விவகாரத்தை வைத்து திசை திருப்புவதா?- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kachchathivu ,Chief Minister ,M.K.Stal ,Modi ,CHENNAI ,M. K. Stalin ,Lok Sabha elections ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...