×

கச்சத்தீவு விவகாரம்.. இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உண்டு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!!

டெல்லி: 1974 ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையே ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்;

கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு. 1974 ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உள்ளது. இந்திய மீனவர்கள் 6184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்தது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

The post கச்சத்தீவு விவகாரம்.. இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உண்டு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Kachchathivu ,External Affairs Minister ,Jaishankar ,New Delhi ,Kachchathivi ,Lok Sabha elections ,Union ,Kachchativu ,Dinakaran ,
× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை...