×

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைப்பு

டெல்லி: நாடு முழுவதும் ஏப்.1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு உத்தரவை திரும்ப பெறுவதாக சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கட்டண உயர்வை திரும்பப் பெறும் கடிதம் நேற்றிரவு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிந்தபிறகு அதாவது ஜூன் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

The post நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,National Highways Commission ,Highways Commission ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...