×

மயாமி ஓபன் டென்னிஸ் கோலின்ஸ் சாம்பியன்

மயாமி: அமெரிக்காவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் வீராங்கனை டேனியலி கோலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினாவுடன் (24 வயது, 4வது ரேங்க்) மோதிய கோலின்ஸ் (30 வயது, 53வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது. டபுள்யு.டி.ஏ 1000 தொடரில் கோலின்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மயாமி ஓபன் டென்னிஸ் கோலின்ஸ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Miami Open ,Collins ,Miami ,Danielle Collins ,US ,Miami Open Tennis ,Dinakaran ,
× RELATED ஸ்ட்ராஸ்போர்க் டென்னிஸ் மேடிசன் கீஸ் அசத்தல்