×

திருவொற்றியூர் விம்கோ நகரிலிருந்து எண்ணூர், மாதவரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்: வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி உறுதி

திருவொற்றியூர்: வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி எம்பி திருவொற்றியூர் மேற்கு பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கே.பி.சங்கர் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் அருள்தாசன், மண்டலக்குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அஜாக்ஸ் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திறந்த ஜீப்பில் வேட்பாளர் கலாநிதி வீராசாமி பிரசாரத்தை துவங்கினார்.

அன்சா அப்பார்ட்மென்ட், மாணிக்கம் நகர், எர்ணாவூர், கே.வி.கே.குப்பம், சுனாமி குடியிருப்பு, ராம கிருஷ்ணாநகர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று கலாநிதி வீராசாமி எம்பி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குசேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘எண்ணூர் பறக்கும் சாலை, விம்கோ நகரில் இருந்து எண்ணூர் மற்றும் மணலி வழியாக மாதவரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான 12,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்றாலும் தமிழக அரசின் கஜானாவில் இருந்து நிச்சயமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

பிரசாரத்தின்போது, மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், மாவட்ட அயலக அணி தலைவர் லயன் எஸ்.டி.சங்கர், மாவட்ட அமைப்பாளர்கள் மதன்குமார், தியாகராஜன், எம்.எம். செந்தில், கவுன்சிலர்கள் திரவியம் சாமுவேல், ஜெயராமன், கே.பி.சொக்கலிங்கம், தம்பியா என்ற தமிழரசன், சிவகுமார், திமுக நிர்வாகிகள் ராமநாதன், திருசங்கு, எம்.வி.குமார், வை.ம.கண்ணதாசன், எம்.ராம்குமார், ராஜேஷ், குமரேசன், சந்தர், கேபிள் டிவி ராஜா, சதீஷ்குமார், காங்கிரஸ் வடக்கு பகுதி செயலாளர் அரவிந்த் ஆறுமுகம், சுகுமாரன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணிரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குசேகரித்தனர்.

முன்னதாக, திருவொற்றியூர் மத்திய பகுதி சார்பில் மணலி பாடசாலை தெரு, திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில் பெரியார் நகர் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

The post திருவொற்றியூர் விம்கோ நகரிலிருந்து எண்ணூர், மாதவரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்: வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி உறுதி appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Vimco ,Ennore ,Madhavaram ,West ,Chennai ,DMK ,Kalanidhi Veerasamy ,Tiruvotiyur ,Kalanithi Veeraswamy ,North Chennai ,Tiruvotiyur West ,DMK High Level Action Committee ,TKS Elangovan ,District Secretary ,Madhavaram Sudarsanam ,MLA ,KP Shankar ,Thiruvottiyur Vimco City ,Kalanithi Veerasamy ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...