×

சுற்றுலாதலமான ஏலகிரி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக 40 பயணிகள் உயிர் தப்பினர்

ஏலகிரி: சுற்றுலா தலமான ஏலகிரி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் விபத்துக்குள்ளானது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 14 சிறிய கிராமங்கள் உள்ளன. இம்மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் ஏலகிரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்திருந்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அரசு பேருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு தாயலூர் கிராமத்தில் இருந்து திருப்பத்தூருக்கு சென்றது.

இதில் ஏலகிரி மலை கிராம மக்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் செல்லும்போது பஸ்சின் பிரேக் திடீரென செயல் இழந்ததாக ெதரிகிறது. உடனடியாக அரசு பஸ் ஓட்டுனர் எதிரே வரும் வாகனத்தின் மீது மோதாமல் வளைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினார்.  இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் எந்தப் பயணிகளுக்கும் படுகாயம் ஏற்படவில்லை என்று ஏலகிரி மலை போலீசார் தெரிவித்தனர்.

The post சுற்றுலாதலமான ஏலகிரி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக 40 பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : hill ,Elagiri ,Elagiri hill pass ,Elagiri hill ,Jolarpet ,Tirupattur district ,Dinakaran ,
× RELATED ரூ.40 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி 100 நாள் தொழிலாளிக்கு நோட்டீஸ்