×
Saravana Stores

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்கு சேகரிப்பு பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு

கறம்பக்குடி, மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் வழிபாடு செய்து விட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மேல சிந்தாமணி அருகே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் பேசியதாவது, புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மருத்துவ கல்லூரியை திறந்து வைத்த அரசு அதிமுக அரசு. தமிழகத்தில் 2வது பல் மருத்துவ கல்லூரியை திறந்து வைத்த அரசு அதிமுக அரசு. எனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியை போல் நான் தான் எனது குடும்பத்தில் முதல் தலைமுறை அரசியல் வாதி. ரங்கம் தொகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள அடிமனை பிரச்னைகளை நான் வந்த பிறகு பொது மக்களுக்கு நிறைவேற்றி தருவேன்.

குறிப்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் பொது மக்களின் அடிப்படை கோரிக்கை களை நிச்சயம் நிறைவேற்றி தருவேன் என்றார். முன்னதாக வேட்பாளர் கருப்பையாவிற்கு அதிமுக மாணவர் அணி சார்பில் கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவிக்க பட்டு வரவேற்பு அளிக்கபட்டது. இந்த தீவிர பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், சீனிவாசன் அதிமுக அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், கழக செயலாளர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

The post திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்கு சேகரிப்பு பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Karupiya ,Trichy East Assembly ,Karambakudi ,Pudukottai District Karambakudi ,Trichy ,Parliamentary Constituency ,Vinayagar temple ,Malaikota ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது...