×

மதுரை தொகுதியில் 21 பேர் போட்டி

மதுரை, மார்ச் 31: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் தங்களது மனுவை திரும்ப பெற கடைசி நாளான நேற்று யாரும் வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. இதன்படி, வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை முடிந்து இறுதியான 21 பேரும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜ சார்பில் ராம.னிவாசன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமர்பாண்டி ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

மேலும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் சண்முக சுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாதேவி, பகுஜன் திராவிட கட்சி சார்பில் பாண்டியன், எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் சார்பில் பாண்டியன், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். ஆவடைநாதன், கோபாலகிருஷ்ணன், கோபிசன், சங்கரபாண்டி, சந்திரசேகர், சரவணன், பூமிநாதன், பெரியசாமி, முத்துப்பாண்டி, ராமநாதன், வெங்கடேசன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சுயேட்சைகளாகவும் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 21 பேர் போட்டியிடுவது இறுதியாகியுள்ளது.

The post மதுரை தொகுதியில் 21 பேர் போட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai parliamentary seat ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை