×

திண்டுக்கல்லில் தேர்தல் விதிமீறி சின்னம் வரைந்த 5 பேர் மீது வழக்கு

திண்டுக்கல், மார்ச் 31: திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம், கல்நாட்டான்பட்டி, அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வீடுகளின் சுவர்களில் கட்சி சின்னம் வரைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வக்கம்பட்டியை சேர்ந்த அழகுவேல் (50), அழகம்பட்டியை சேர்ந்த சசிகுமார் (37), கல்நாட்டாம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (40), முருகேசன் (56), அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த சடையப்பன் (70) ஆகிய 5 பேர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் தேர்தல் விதிமீறி சின்னம் வரைந்த 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Vakkampatti ,Balakrishnapuram ,Ponnakaram ,Kalnathanpatti ,Anumandarayankot ,Dindigul Taluk Police Station ,Vakkampati ,
× RELATED 14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் தந்தைக்கு ரூ.25,000 அபராதம்