×

சூதாடிய 6 பேர் கைது

ஈரோடு,மார்ச்31: பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் ராமகிருஷ்ணா நகர், சக்தி மாரியம்மன்கோயில் அருகில் சூதாட்டம் நடப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ரெய்டு நடத்தியதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரிச்சேரி பெருமாள்(56), புதுப்பாளையம் ராஜன் (64), தளவாய்பேட்டை சரவணன் (44),புதுப்பாளையம் நடராஜன் (58),ராமலிங்கம் (52), ஆப்பக்கூடல், காந்திநகர் கோபால் (38) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.2350 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Appakodal police ,Shakti Mariamman temple ,Ramakrishna Nagar ,Appakodal ,Bhawani ,Oricherry Perumal ,Pudupalayam Rajan ,Dalavaipet ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை