×

சில்லி பாயின்ட்…

* ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணி ஏப்ரல் மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள், 15 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான ஐசிசி கெடு மே 1ம் தேதியுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.
* ஆண்கள் பேட்மின்டன் இரட்டையர் பிரிவு தரவரிசையில் 10 வாரங்களாக நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை, சாய்னா நெஹ்வாலின் சாதனையை முறியடித்துள்ளது. சாய்னா 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் அக். 21 வரை 9 வாரங்களுக்கு நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார்.
* ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த அணியின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாண்டியாவுக்கு சுழல் நட்சத்திரம் ஆர்.அஷ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரசிகர்களின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது. இதற்கு சினிமா கலாச்சாரமே காரணம். இங்கு மட்டுமே இது போல நடக்கிறது’ என்றார்.
* லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் டேவிட் வில்லி, சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதையடுத்து, எல்எஸ்ஜி அணியில் வில்லிக்கு பதிலாக நியூசிலாந்து வேகம் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Cricket Board ,Indian ,ICC World Cup T20 ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…