×

வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இலங்கை 4 விக்கெட்டுக்கு 314 ரன் குவிப்பு

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்துள்ளது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. மதுஷ்கா – கருணரத்னே முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். மதுஷ்கா 57 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து கருணரத்னே – குசால் மெண்டிஸ் இணைந்து 114 ரன் சேர்த்தனர். கருணரத்னே 86 ரன், குசால் மெண்டிஸ் 93 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்துள்ளது. சண்டிமால் 34 ரன், கேப்டன் தனஞ்ஜெயா 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் ஹசன் மகமூத் 2, ஷாகிப் ஹசன் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இலங்கை 4 விக்கெட்டுக்கு 314 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Bangladesh ,Ahmed Chaudhary Stadium ,Madushka ,Dinakaran ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு