×

ஆந்திர வெள்ள நிவாரணம் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் ரூ.75 லட்சம் நிதி

சென்னை: ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக கடப்பா, சித்தூர், அனந்தபூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் கிராமங்களை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் 211 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழைக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநில அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதையறிந்த தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாயை, ஆந்திர முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்….

The post ஆந்திர வெள்ள நிவாரணம் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் ரூ.75 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Tags : Chiranjeevi ,Mahesh Babu, Jr. ,NTR ,Chennai ,Kadapa ,Chittoor ,Anantapur ,Andhra Pradesh ,
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!