×

ஏரியில் மூழ்கி தாய், மகள் உட்பட 4 பெண்கள் பலி

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரோஜா அம்மாள்(50). இவர்களது 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. 4வது மகள் லலிதா(28) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதித்து இறந்துவிட்டார். அதே பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (45) என்பவரின் மனைவி லாவண்யா(40). இவர்களது மூத்த மகள் காவியா(18) கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். 2வது மகள் பிரீத்தி(17) பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சரோஜா அம்மாள், லலிதா, காவியா, பிரீத்தி ஆகிய 4 பேரும் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்துவிட்டு அங்குள்ள ஏரியில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 4 பேரும் தவறி ஏரியில் விழுந்து தத்தளித்து நீரில் மூழ்கி உயிரிழிந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post ஏரியில் மூழ்கி தாய், மகள் உட்பட 4 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Shankar ,Thanganagar ,Gudiatham, Vellore district ,Saroja Ammal ,Lalitha ,
× RELATED தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரகளை...