×
Saravana Stores

தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது வரவில்லை; தேர்தல் வந்தவுடன் சந்துக்கு, சந்து மோடியை பார்க்கிறோம்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி வரவில்லை. ஆனால், தேர்தல் வந்தவுடன் அடிக்கடி, சந்துக்கு சந்து மோடியை பார்க்கிறோம் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமுகம் மேற்கு பகுதியில் உள்ள பல்வேறு வட்டங்களில், நாடாளுமன்றத் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்தனர்.

எழும்பூர் வடக்கு பகுதி சூளையில் உள்ள ஆலந்தூர் சுப்பிரமணியம் தெருவில் பணிமனை திறந்து வைத்த பின்னர் தயாநிதி மாறன் எம்பி அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் எங்கள் வருங்காலம் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மக்கள் வரவேற்பு அமோகமாக இருக்கிறது. அதனால், கண்டிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். போகும் இடத்தில் எல்லாம் மக்கள் கேட்பது என்னவென்றால், தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி வரவில்லை. பிரச்னை வரும் போது பிரதமர் மோடி வரவில்லை. ஆனால், தேர்தல் வந்த உடன் அடிக்கடி, சந்துக்கு சந்து மோடியை பார்க்கிறோம். நாங்கள் கேட்கிறோம். எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் நிவாரண நிதியாக ரூ.6000 ெகாடுத்தார். நீங்கள் எத்தனை நயா பைசா கொடுத்தீர்கள். ஒரு நயா பைசா கூட கொடுக்கவில்லை.

இன்றைக்கு மோடி சொல்கிறார். தமிழை தாய்மொழியாக கருதுகிறேன் என்கிறார். தமிழை தாய்மொழியாக கருதுகிறேன் என்று சொல்கிறீர்களே?. மேடையில் டெலிபிராம்ட் வைத்து தமிழில் படிக்கிறீர்களே?. நான் கேட்கிறேன். செம்மொழியான தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள். இது எல்லாம் பொய் அல்லவா?. வெற்று பேச்சு அல்லவா. தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழி என்பீர்கள். கர்நாடகா சென்று கன்னடம் தாய்மொழி என்பீர்கள். அங்கே ஆந்திரா சென்று தெலுங்கு என் தாய்மொழி என்பீர்கள். இப்படி ஏமாற்றாதீர்கள். ஏமாற்றியது போதும், நாங்கள் ஏமாந்தது போதும், இனி தமிழ்நாட்டு மக்கள், இந்திய மக்கள் ஏமாற மாட்டார்கள். விந்தையிலும் விந்தை, தமிழ்நாட்டுக்கு எந்த நிதியை ஒதுக்காத நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

தேர்தலில் போட்டியிட எனக்கு பணம் இல்லை என்கிறார். அப்படி என்றால் மோடிக்கு பணம் இருக்கிறதா?. மோடி 2 தொகுதியில் போட்டியிடுகிறார். அண்ணாமலையிடம் பணம் இருக்கா, முருகனிடம் பணம் இருக்கா. மற்ற எல்லா அமைச்சர்களும் போட்டி போடுறார்களே. யாரை குறை சொல்கிறார். அவர் தனது கட்சியின் தலைவர்களை குறைசொல்கிறார். மோடியை குறை சொல்கிறார். அது தான் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது வரவில்லை; தேர்தல் வந்தவுடன் சந்துக்கு, சந்து மோடியை பார்க்கிறோம்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sandhu ,Modi ,Dayanidhi Maran ,CHENNAI ,Chennai East District ,DMK ,Secretary Minister ,PK Shekharbabu ,DMK Sports Development ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...