×
Saravana Stores

அதிமுகவில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்

சென்னை: அதிமுகவில் தர்மபுரி, சென்னை வடக்கு, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், சென்னை வடக்கு தொகுதி- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, கன்னியாகுமரி-முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம்.வின்சென்ட், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், தென்காசி- கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் அதிமுக கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags : task ,AIADMK ,CHENNAI ,Dharmapuri ,Chennai North ,Kanyakumari ,Kanchipuram ,Tenkasi ,Dharmapuri Parliamentary Constituency ,K. Singharam ,Former Minister ,Mullai Vendan ,North Constituency ,Thiruvallur East District ,Madhavaram ,AIADMK Additional Election Task Force ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில்...