×

ஈஸ்டர் கொண்டாட்டம் தென்னாப்பிரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

லிம்போபோ: தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 45 பேர் பலியாகினர். இறந்தவர்கள் அனைவரும் அண்டை நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில் இருந்து ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக தேவாலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் என்று தென்னாப்பிரிக்கா ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது. அவர்கள் சென்ற பேருந்து மொகோபனே மற்றும் மார்கென் இடையே உள்ள மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் பலியாகினர். 8 வயது சிறுமி மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஈஸ்டர் கொண்டாட்டம் தென்னாப்பிரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : South Africa ,Easter ,Limbo ,Limpopo province ,Botswana ,Kaborone ,
× RELATED இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்