×

உபி சிறையில் விஷம் வைத்து மாஜி எம்எல்ஏ முக்தார் அன்சாரி கொல்லப்பட்டாரா? நீதி விசாரணை நடத்த உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச சிறையில் பிரபல தாதாவும், மாஜி எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர் பிரபல தாதா முக்தார் அன்சாரி. இவர் மீது 15 கொலை வழக்குகள் உட்பட 61 குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்த அன்சாரி, ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் உபியில் பதற்றம் ஏற்பட்டது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முக்தார் அன்சாரி மரணம் குறித்து அவரது மகன் உமர் அன்சாரி கூறுகையில், ‘எனது தந்தை சிறையில் இருந்த போது, அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது. எனது தந்தையின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார். இந்தநிலையில் முக்தார் அன்சாரியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரப் பிரதேசத்தின் பண்டாவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) பகவான் தாஸ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

The post உபி சிறையில் விஷம் வைத்து மாஜி எம்எல்ஏ முக்தார் அன்சாரி கொல்லப்பட்டாரா? நீதி விசாரணை நடத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MLA ,Mukhtar Ansari ,UP Jail ,Lucknow ,Uttar Pradesh ,Dada ,UP ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...