×

ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,700 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் வருவாய் தொடர்பாக மறுமதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. இது தேர்தலை சந்திக்க விடாமல் தங்களை முடக்கும் நடவடிக்கையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறத்தில் மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு தடை விதிக்க நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து அந்த கட்சிக்கு ரூ.1700 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக கூறி வருமான வரித்துறை வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 1,700 கோடி ரூபாய் என்பது 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் வருமான வரி நிலுவை, அபராதம், வட்டி ஆகியவற்றின் மொத்த தொகை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சத்திற்கான வரியை தாமதமாக செலுத்தியது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, பிறகு அந்த கணக்குகளை தீர்ப்பாயத்தின் தலையீட்டால் நிபந்தனையுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மற்றோரு புகாரில் காங்கிரசின் 4 வங்கி கணக்குகளில் இருந்து 135 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளை இரண்டாவது முறையாக அமெரிக்கா கண்டித்து சூழலில் தற்போது ரூ.1,700 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தப்படும். வருமான வரித்துறையின் செயல், காங்கிரசை செயலிழக்க செய்யும் பாஜகவின் சதி. தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தங்கள் குரல் வளையை நசுக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

The post ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Congress party ,Delhi ,Lok Sabha ,Congress ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...