தேனி, மார்ச் 29: தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தேனி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்தார். தேனி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிக்கை: தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டமன்ற பகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக கவுரங்பாய்மக்வானா மற்றும் காவல் பார்வையாளராக ஜித் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான விதிமீறல் மற்றும் புகார்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் பொதுப்பார்வையாளரை நேரிலும், மேலும், தேர்தல் பார்வையாளரான கவுரங்பாய்மக்வானாவை 9442025611 என்ற எண்ணிலும், காவல் பார்வையாளர் ஜித்தை 9442030318 என்ற எண்ணிலும் தொடர்பு காண்டு புகார் தெரிவிக்கலாம் என தேனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்
The post தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.