×

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் அளவிடும் பணி செய்யாறு அருகே உக்கல் கிராமத்தில்

செய்யாறு, மார்ச் 28: செய்யாறு அருகே உக்கல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை அளவிடும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அடுத்த உக்கல் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில் உக்கல் கிராமத்தில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வைதீஸ்வரர் கோயிலுக்குச் செந்தமான இடங்கள் 7 ஏக்கர் 98 சென்ட் உள்ளது. இதனை மண்டல இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் கோயில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, சுப்ரமணியன், ஆய்வர் முத்து சாமி, நில அளவையர்கள் சின்ன ராஜா, சிவக்குமார், அருணாசலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் அடங்கிய குழுவினர் நேற்று முதல் கட்டமாக சுமார் 3 ஏக்கர் 69 சென்ட் நிலத்தினை நவீன தொழில்நுட்ப (டிஜிபிஎஸ்) கருவியின் மூலம் அளவீடு செய்தனர்.

The post இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் அளவிடும் பணி செய்யாறு அருகே உக்கல் கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Hindu Charities Department ,Ukkal village ,Seiyar ,Cheyyar ,Hindu Religious Charities Department ,Tiruvannamalai District ,Seyyar ,Hindu Religious Charitable Department ,Hindu Charitable Department ,
× RELATED சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி...