தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க் கடலை ஒரு கப்
முந்திரி பருப்பு அரை கப்
பிரட் துண்டுகள் 2 கப்
பால் ஒரு கப்
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்த மல்லி சிறிதளவு
உப்பு தேவை யான அளவு
பொரிப் பதற்கு எண்ணை 400 கிராம்
செய்முறை:
வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவ ற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பிரட் துண்டு களை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்து மல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டி யாகப் பிசையவும். தேவை யான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்து வைத்தி ருக்கும் கலவையை போண்டாக் களாக கிள்ளி எண்ணையில் போடவும். நன்கு சிவந்து மொறு, மொறுப் பானதும் வடிகட்டியில் போடவும். ஒருதட்டில் வைத்து சூடாகப் பரி மாறவும்.
The post வேர்க்கடலை போண்டா appeared first on Dinakaran.