×

ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்: சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டிருப்பதாகவும், தொகுதிக்கு 3 என்ற ரீதியில் மொத்தம் 48 குழுக்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

The post ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்: சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Election Officer ,Radhakrishnan ,District Election Officer ,2024 Lok Sabha elections ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்