×

நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை வீசும்.. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

டெல்லி: இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் வழக்கைத்தை விட அதிக வெப்பமான கோடைக்கு தயாராகுங்கள் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி; இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் வெப்ப அலைகளுடன் இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவும் என தெரிவித்துள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மதியம் 12மணி முதல் மாலை 3மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிதல். வெளியிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை அல்லது தொப்பி, காலனிகளை பயன்படுத்த வேண்டும். மதுபானம், தேநீர், காபி மற்றும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ அனுமதிக்கக்கூடாது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வசதிகளை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். கோடை காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை வைத்திருக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

The post நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை வீசும்.. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,Indian Meteorological Centre ,Study Center ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...