×

ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்: கனிமொழி பேச்சு

கரூர்: ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கிருஷ்ணராயபுரம் கடை வீதி பகுதியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி.; ஒன்றிய பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும்; டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்று மோடி அரசு ஏமாற்றியுள்ளது.

விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68,000 கோடி கடன்களை ரத்து செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி.க்கள் செய்திகள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் செய்துள்ளது பாஜக. நிறுவனங்கள் மீது வழக்குகளைப் போட்டு மிரட்டி பணம் வசூலித்துள்ளது பாஜக.

ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது பாஜக. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்: கனிமொழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Kanimozhi ,Karur ,
× RELATED மக்களவை சபாநாயகராக நியமனமா? ஆந்திரா...