- காங்
- தேவகோட்டை
- மக்களவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- கார்த்திக் ப.சிதம்பரம்
- சிவகங்கை மக்களவை
- திமுக
- காங்கிரஸ்
- தின மலர்
தேவகோட்டை, மார்ச் 28: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்திக் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இது தொடர்பான வேட்பாளர் அறிமுக கூட்டம், தேவகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். இதில் காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, திமுக நிர்வாகிகள் தென்னவன், ஜோன்ஸ்ரூஸோ, தேவகோட்டை நகர் கழக செயலாளர் பாலமுருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் மீரா உசேன், பூமிநாதன், அப்பச்சி சபாபதி, அட்வகேட் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post காங். வேட்பாளர் அறிமுக கூட்டம் appeared first on Dinakaran.