×

மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்

சென்னை: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள பட வெற்றி குறித்து கமல்ஹாசன் கூறியது: ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ படங்களுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. ‘இந்தியன் 2’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ‘இந்தியன் 3’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறும். என்னுடைய தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அடுத்து ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். என்னுடைய படத்துக்கான ஃபார்முலா இன்றைய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கான வெற்றியாக அமைந்துள்ளது என கூறுகிறீர்கள்.

அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவுக்கு நன்றி. நான் எப்போதும் லைம் லைட்டில் இருக்கும் ஒரு பூச்சி. இது எனக்கும், இளையராஜாவுக்கும் கிடைத்த புகழாரமாக கருதுகிறேன். ஏஐ என்பது புதிய தொழில்நுட்பம். நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். விஆர்எஸ், பென்ஷன் என எதுவுமே இல்லாத சினிமா போன்ற துறையில் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் கவனிக்க வேண்டும். திரைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் ஒரு நிறுவனம் வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மலையாளத் திரையுலகம் நம்மைவிட முன்னோக்கிச் செல்வதற்குக் காரணம், அவர்கள் சர்வதேச சினிமாவைப் பற்றி அறிந்திருப்பதுதான்.

The post மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kamalhassan ,Chennai ,Kamal Hassan ,Dinakaran ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...