×

குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி

புதுடெல்லி: குஜராத் மாஜி தலைமை செயலாளர், முன்னாள் சட்ட ஆணையத் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி உள்பட 3 பேர் நேற்று லோக்பால் உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இருக்கலாம். தற்போது தலைவராக முன்னாள் நீதிபதி கன்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்த டிகே ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர்சிங் ஆகியோரின்பதவிக்காலம் மார்ச் 26ம் தேதி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து புதிய உறுப்பினர்களாக முன்னாள் சட்ட ஆணைய தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் பங்கஜ்குமார், மத்தியபிரதேசத்தில் மாஜி ஐஏஎஸ் அதிகாரி அஜய் டிர்கி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இவர்களுக்கு லோக்பால் தலைவர் நீதிபதி ஏஎம் கன்வில்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

The post குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி appeared first on Dinakaran.

Tags : Lokpal ,Chief Secretary of ,Gujarat ,New Delhi ,Former ,Law Commission ,Chief Justice ,Ritu Raj Awasthi ,Chief Secretary ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...