×

2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக வரும் ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், கேரளாவில் உள்ள 20 எம்பி தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 5ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 8ம் தேதி. மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களில் மனுதாக்கல் செய்ய முடியாது. இதனால் வேட்பாளர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய மொத்தத்தில் 5 நாட்கள் மட்டுமே கிடைக்கும்.

The post 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : phase ,New Delhi ,Lok Sabha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 13 மாநிலங்களில் மக்களவை 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு