×

சில்லி பாய்ன்ட்…

* பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான (2026, பாரிஸ்) ஆசிய தகுதிச்சுற்றில், கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை போராடி வென்றது. தனது 150வது சர்வதே போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் சுனில் செட்ரி கோல் அடித்து அசத்தினார். எனினும், கடைசி தருணத்தில் ஆப்கான் அடுத்தடுத்து 2 கோல் அடித்து வெற்றியை பறித்தது. இந்தியா அடுத்து வலுவான கத்தார் (ஜூன் 11), குவைத் (ஜூன் 6) அணிகளின் சவாலை சந்திக்கிறது.
* மயாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், நிகோலஸ் ஜாரி (சிலி), யானிக் சின்னர் (இத்தாலி), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), ஃபேமியான் மரோஸ்சன் (ஹங்கேரி), தாமஸ் மாகாச் (செக் குடியரசு) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
* நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இந்தியாவின் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்மூலம் அடுத்த 7 ஆண்டுகளுக்கு நியூசி. ஆண்கள், பெண்கள் அணிகள் விளையாட உள்ள டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான தொடர்களையும் இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் ஒளிபரப்பு செய்யும் உரிமையை சோனி பெற்றுள்ளது.
* லத்தீன் அமெரிக்க நாடு கால்பந்து கிளப் வீரராக தேர்வாகி உள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சென்னையின் எப்சி கால்பந்து அணி வீரர் பிஜாய் செட்ரி (22) பெற்றுள்ளார். அவர் உருகுவே நாட்டின் காலன் ஃபுட்பால் கிளப் உடன் இணைந்துள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த பிஜாய், 2023 ஜூலை மாதம் தான் சென்னை அணியில் இணைந்தார். ‘பிரேசில், அர்ஜென்டீனா, உருகுவே, சிலி என கால்பந்து உலகின் ஜாம்பவான்களை உருவாக்கிய நாடுகளின் கிளப் ஒன்றுக்காக இந்திய வீரர் ஒருவர் விளையாட ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று சென்னை அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வீடா தானி தெரிவித்துள்ளார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Qualifier ,FIFA World Cup Football Series ,Paris ,Afghanistan ,India ,Guwahati ,Dinakaran ,
× RELATED அகமதாபாத்தில் நாளை முதல் குவாலிபயர்...