×

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏப்ரல் 5 மற்றும் 13ம் தேதிகளுக்கான சுற்றுப்பயண திட்டம் மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி, 5ம் தேதி வெள்ளி மாலை 4 மணி கவுந்தம்பாடி திருப்பூர், இரவு 7 மணி பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை ஈரோடு மாநகர் பகுதியிலும், 13ம் தேதி மாலை 4.30 மணி விழுப்புரம் நகரம், மாலை 5.30 மணி தியாகதுருகம் ரோடு, கள்ளக்குறிச்சி, இரவு 7 மணி ராணிப்பேட்டை, ஆத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,general secretary ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்