×

குடிநீர் பிரச்னைகளுக்கு கட்டுப்பாட்டு அறை வீட்டில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தை தணிப்போம்

*திருப்பதி கலெக்டர் வேண்டுகோள்

திருப்பதி : வீட்டின் வெளியே தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தை தணிப்போம் என கலெக்டர் பேசினார். திருப்பதி கலெக்டர் அலுவலக காணொலிக் காட்சி அரங்கில் இருந்து கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் திட்டங்கள், வேலை உறுதி திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை நாள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமி ஷா மண்டல அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது: திருப்பதி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க செயல் திட்டங்களை தயார் செய்து ஆழ்துளை கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்த 15வது நிதிக்குழு நிதியை பயன்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்னைகளுக்கு மாவட்ட மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். குடிநீர் திட்ட பழுது குறித்த புகார்களுக்கு 48 மணி நேரத்திலும், கை பம்பு பழுது குறித்த புகார்களுக்கு 24 மணி நேரத்திலும் தீர்வு காண வேண்டும்.

வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நகராட்சி, மண்டலங்களில் பொது இடங்களில் தண்ணீர் குளிர்விப்பான் அமைத்து மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகளுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் நம் வீட்டிற்கு வெளியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தை தணிப்போம். தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை நகராட்சி மற்றும் மண்டலத்தில் குடிநீர் மேலாண்மை குறித்து கூட்டம் நடத்த வேண்டும். நகரங்களில் உள்ள கோடைகால சேமிப்பு தொட்டிகள், பல கிராமங்கள், வசிப்பிட பகிர்மான சிபிடபல்யூ திட்டங்கள் மற்றும் ஜூன் 31 வரை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை நாட்கள் வழங்கவும், சராசரி ஊதியம் சிறப்பாக இருப்பதை உறுதி ஓட்டுச்சாவடி மையங்களில் சாய்வுதளம், கழிப்பறை, மின் வினியோக பலகைகள் அமைக்கவும் வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட குடிநீர் வழங்கல் அலுவலர் விஜய்குமார், திட்ட மேலாளர் துவாமா சீனிவாசராவ், மாவட்ட பஞ்சாயத்து ராஜ், பொறியியல் அலுவலர் சங்கரநாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post குடிநீர் பிரச்னைகளுக்கு கட்டுப்பாட்டு அறை வீட்டில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தை தணிப்போம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi Collector ,Tirupati ,Tirupati Collector ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது