×

வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த சேலைகள் பறிமுதல்: அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் நேற்று பண்டல் பண்டலாக சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நேற்று ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கல்யாண ஸ்டோரில் சுமார் 100க்கும் மேற்பட்ட பண்டல்களில் சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது 161 பண்டல்களில் சுமார் 25ஆயிரம் சேலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கல்யாண ஸ்டோரின் உரிமையாளர் ரவிச்சந்திரன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பண்டல்கள் தனது நண்பர் யுவராஜ் என்பவர் கொடுத்ததாகவும், இது அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்காக இங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனடிப்படையில் பண்டல்களை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் இது தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடைப்படையில் வாக்காளர்களுக்கு வழங்க சேலைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஆற்றல் அசோக்குமார், அவரது நண்பர் யுவராஜா மற்றும் கல்யாண ஸ்டாரின் உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

The post வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த சேலைகள் பறிமுதல்: அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Energy ,Ashokumar ,Erode ,Lok Sabha Constituency Supreme ,Candidate ,Energy Asokumar ,Bandal Bandal ,Kalyana ,Kauntapadi, Erode district ,Supreme Candidate ,Dinakaran ,
× RELATED சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண...