×

பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

பிஜி: பிஜி தீவில் இன்று காலை 6.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுவா நகருக்கு தென் மேற்கே 591 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.

ஆஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிஜியின் தலைநகர் சுவாவில் புதன்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ள தகவலின்படி இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக உள்ளது. இன்று காலை 6.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. NCS படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இது சுவாவிற்கு தென்மேற்கே 591 கிமீ தொலைவில் உணரப்பட்டது.

The post பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Fiji ,Suva city ,Vanuatu Island ,Fiji Island ,Dinakaran ,
× RELATED பிஜி, வானாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்