×
Saravana Stores

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கு: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது. அப்போது, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம், குறிப்பாக குற்றவாளிகள் பயன்படுத்திய தொப்பி ஒன்று மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்டதாக முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது. இருவரும் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்து இருந்தது தெரியவந்தது. மேலும், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் முஸவீர் ஹூசைன் ஷாகிப் அணிந்து இருந்த தொப்பி சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் வாங்கியதும், வெடிகுண்டு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தொப்பி மூலமே இந்த வழக்கில் துப்புதுலங்க உதவியாக இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரும் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளா வழியாக தமிழகம் வந்து பிறகு சென்னை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்றதாக விசாரணை மூலம் உறுதியாகியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கு: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : Bangalore Rameshwaram Cafe Hotel Bombing Case ,NIA ,Tamil Nadu ,Chennai ,Rameshwaram ,Cafe ,Bangalore ,Rameshwaram Cafe ,Kundalahalli, Bengaluru ,Bangalore Rameshwaram Cafe Hotel Bombing ,NIA Test ,
× RELATED வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்