×

வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்

சென்னை: கோரிக்கைகள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஜாதா என்பவர் என்.ஐ.ஏ. வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிக்கை வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறைகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

The post வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Chennai High Court ,Sujata ,NIA ,Puzhal Jail ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...