×

ஏற்காட்டில் 3 இடங்களில் ஏற்பட்ட தீ அணைப்பு

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம், ஆத்துப்பாலம் மற்றும் வாணியாறு ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 8 மணியளவில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த ஏற்காடு வனஅலுவலர் முருகன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஏற்காடு, சேலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இன்று அதிகாலை 3 மணியளவில் தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தால் ஏராளமான மரங்கள், செடிகள் எரிந்து நாசமானது. தொடர்ந்து ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏற்காட்டில் 3 இடங்களில் ஏற்பட்ட தீ அணைப்பு appeared first on Dinakaran.

Tags : Irrath ,YERADU ,YERADAD ,MARAMANGALAM ,ATHUPALAM ,VANIARU ,SALEM ,DISTRICT ,Forest Officer ,Murugan ,Yerevan ,Dinakaran ,
× RELATED வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்