×

பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம் வருகை: முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார்

காஞ்சிபுரம்: பிரான்ஸ் நாட்டு தூதர் தியரி மேத்யூ, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று காஞ்சிபுரம் வந்து, முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார். இவருக்கு, ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பாரம்பரிய முறைப்படி கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன் இணைந்து கைலாசநாதர் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், பட்டு சேலைகள் நெசவு நெய்யும் இடம் ஆகியவற்றை பிரதிநிதிகளுடன் பிரான்ஸ் நாட்டு தூதர் பார்வையிட்டனர். சுற்றுலா வழிகாட்டி மூலம் கோயில்களின் வரலாற்று, கலாசார நிகழ்ச்சிகள் குறித்து முக்கிய விருந்தினர்களுக்கு விவரிக்கப்பட்டது. அனைத்து இடங்களையும் பார்வையிட்ட பின்னர் முக்கிய விருந்தினர்கள் மகிழ்வுடன் சென்றனர்.

தங்களது பயணம் மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்ததாகவும், சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாத்துறைக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என பிரான்ஸ் தூதர் தெரிவித்தார்.

The post பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம் வருகை: முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,France ,Thierry Mathieu ,Ekambareswarar temple ,Sakthivel ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...