×

முந்திரி சிக்கி

தேவையான பொருட்கள்

150 கிராம் முந்திரிப்பருப்பு
2 டேபிள் ஸ்பூன் நெய்
100 கிராம் வெல்லம் (பொடி செய்தது)
ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்.

செய்முறை

முதலில் முந்திரிப் பருப்பை லேசாகக் கடாயில் வறுத்து சூடாக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன்பின் பொடி செய்த வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை கடாயில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி சேர்த்து திக்கான பாகாக வரும் வரை நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதில் வறுத்த முந்திரியைப் போட்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யும் சேர்த்து மொத்தமாக நன்கு பிரட்டிக் கொள்ளவும். இப்பொழுது அதை நெய் தடவிய ஒரு ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும். நன்கு சுவையான மொறுமொறுப்பான முந்திரி சிக்கி தயார்.

 

The post முந்திரி சிக்கி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்